கல்வி விருது வழங்கும் விழாவிற்கு முதல் ஆளாக வந்த த.வெ.க தலைவர் விஜய்.!

சென்னை: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு உதவித்தொகை, விருது வழங்கி கவுரவித்தார் நடிகர் விஜய்.
தற்போது அதே போல மீண்டும் இந்தாண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை, விருது வழங்கும் விழாவை விஜய் ஏற்பாடு செய்துள்ளார். கடந்த முறை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த விழாவானது இம்முறை விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை தவெக கட்சி தலைவராக நடிகர் விஜய் மாணவர்களை சந்திக்க உள்ளார்.
இந்த விழா இம்முறை இன்று (ஜூன் 28) மற்றும் ஜூலை 3 என இரண்டு கட்டங்களாக விழா நடைபெற உள்ளது. இன்று 21 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை, விருது வழங்கப்பட உள்ளது. இந்த விழா, சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த விழா காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், விழா நடைபெறும் இடத்திற்கு அதிகாலையிலேயே தவெக தலைவர் விஜய் வந்துவிட்டார். போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விழாவை விரைவாக ஆரம்பித்து நிறைவு செய்யவும் விஜய் சீக்கிரமாக வந்துள்ளார் என கூறப்படுகிறது.
விழா ஆரம்பித்த உடன் 10 நிமிடங்கள் விஜய் மாணவர்கள் மத்தியில் பேச உள்ளார். விழாவில் கலந்துகொள்ளும் நபர்கள் செல்போன் கொண்டு செல்ல கூடாது என கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் அவர்கள் குடும்பத்தினரை மட்டுமே உடன் அழைத்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025