“தளபதியை சுத்தி தப்பு நடக்குது., பணம், ஜாதி, ஆனந்த் விஸ்வாசம்.,” த.வெ.க பிரமுகர் பரபரப்பு குற்றசாட்டு?
தவெக-வில் பணம், ஜாதி, பொதுச்செயலாளர் ஆனந்த் மீதான விஸ்வாசம் ஆகியவற்றை கொண்டு தான் பொறுப்புகள் கொடுக்கப்படுகிறது என தவெக பிரமுகர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழக கட்சியை ஆரம்பித்து தற்போது 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் அரசியல் கட்சி தலைவர் விஜய். அரசியல் என்றாலே பல்வேறு ஏற்ற இறக்கங்கள், விமர்சனங்கள் என கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் சாமளிக்க வேண்டிய சூழலையும் அவர் எதிர்கொள்ள வேண்டி வரும். அதனை திறம்பட ஏதிர்கொண்டு செயல்பட்டால் அரசியல் களத்தில் சிறப்பாக செயல்படலாம் என்கிறது தமிழக அரசியல் வட்டாரம்.
தற்போது ஓராண்டு நிறைவிற்குள் 5 கட்டமாக 120 மாவட்ட செயலாளர்களில் 95 பேர்களை நியமனம் செய்துவிட்டார் கட்சி தலைவர் விஜய். நியமனம் செய்தாலும் அதிருப்தி நிர்வாகிகள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்வார்கள். அவர்களையும் சந்தித்து கருத்துக்களை கட்சி தலைமை கேட்டிருந்தால் அந்த உட்கட்சி பிரச்சனை வெளியில் தெரியாத வண்ணம் பார்த்துக்கொள்ளலாம். ஆனால், தற்போதே ஒரு சில நிர்வாகிகள் தங்கள் அதிருப்தி கருத்துக்களை கட்சி தலைமை கேட்க மறுக்கிறது என பொது வெளியில் உட்கட்சி பிரச்சனைகளை கூறி வருகின்றனர்.
அதிருப்தி பிரமுகர்கள் :
இதற்கு முன்னர் ஒரு கட்சி நிர்வாகி மாவட்ட செயலாளர் பதவிகள் சாதி பார்த்து தருகிறார்கள் . நாங்கள் இத்தனை வருடம் உழைத்துள்ளோம். நாங்கள் சாக தான் வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர். தற்போது இன்னொரு தவெக பிரமுகர் வீடியோ வெளியிட்டு அதில், கட்சி பதவிகள் பணம், சாதி பார்த்து வழங்ப்படுகிறது என பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
விஜய்க்கு தெரிவதில்லை?
தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தவெக பிரமுகர் என கூறிக்கொண்டு திருவண்ணாமலையை சேர்ந்த நபர் ஒருவர் பேசுகிறார். அவர் அதில், தவெக தலைவர் விஜய்க்கு கட்சியில் நடப்பது தெரிவிக்கப்படுவதில்லை என்றும், ஆனந்தை முழுதாக நம்புகிறார் என்றும் குற்றம் சாட்டியுளளார்.
ஆனந்த் சார் உண்மையாக இல்லை
வீடியோவில் அந்த நபர் குறிப்பிடுகையில், ” தலைவரை சுற்றி தப்பு நடக்கிறது. இது வெளியில் இருப்பவர்களுக்கு தெரிவதில்லை. கட்சியில் இருப்பவர்கள் ஆனந்த் சாரை புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனந்த் சாரை 100% தலைவர் (விஜய்) நம்புகிறார். ஆனால், அதற்கு ஆனந்த் சார் உண்மையாக இல்லை. பார்க்கிறவர்கள் மத்தியில் உண்மையாக இருப்பது போல் தெரிகிறது. ஆனால், அவர் உண்மையாக இல்லை. அதற்கான காரணத்தை நான் கூறுகிறேன். அதற்கு மறுப்பு இருந்தால் ஆனந்த் சார் சொல்லட்டும். அவர் உரிய காரணம் சொல்லிவிட்டால் நான் இதை தவறு என்று ஏற்றுக் கொள்கிறேன்.
பணம், ஜாதி, விஸ்வாசம் இதுதான் மிக முக்கியம். விஸ்வாசம் என்றால் தலைவருக்கு (விஜய்) விஸ்வாசம் இல்லை. ஆனந்த் சாருக்கு யாரு விஸ்வாசமாக இருக்கிறாரோ அவருக்கு தான் பதவி தருகிறார்கள். பணம், ஜாதி இதற்கு தான் தவெகவில் பதவி தருகிறார்கள். ஆரணி மாவட்டத்தில் தற்போது பொறுப்பு போட்டு உள்ளார்கள். அதில், தலைவர் கையெழுத்திட்டுள்ளார். அங்கு பொறுப்பு கொடுத்த நபர் பக்கா அதிமுக கட்சி குடும்பத்தை சேர்ந்தவர். அவருடைய பையன் அஜித் ரசிகர்.
அவர் பக்கா அதிமுக ஆள்
கடைசியாக வெளியான கோட் (G.O.A.T) படத்திற்கு கூட சின்ன கட்டவுட் கூட வைக்கவில்லை. கட்சிக்கு வந்து மூணு மாதமாகிறது. அந்த நபர் கட்சிக்கு வந்து இதுவரை ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை. உழைக்கவில்லை. அவருக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என பொறுப்பு வழங்கி தலைவருடன் (விஜய்) புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகின்றனர். அவர் குடும்பம் அதிமுகவில் இருந்து பிரிந்ததிலிருந்து டிடிவி தினகரன் கட்சிக்காக வேலை செய்து வருகின்றனர். 2021 தேர்தலின் பொது அமமுகவுக்காக வாக்கு கேட்டு வந்தார்கள். அவர் கட்சியில் சேர்ந்து மூணு மாதம் தான் ஆகிறது. மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுத்திருக்கிறார்கள். பணம், ஜாதி இல்லை என்றால் எந்த அடிப்படையில் அவர்களுக்கு பதவி கொடுத்தார்கள் என ஆனந்த் சார் தான் கூற வேண்டும்.
பலரும் நினைக்கிறார்கள் தலைவர்தான் அனைவரையும் நேரில் பார்த்து பதவி தருகிறார் என்று, ஆனால், அப்படி இல்லை, ஆனந்த் சார் யாரை காட்டுகிறாரோ அவருக்குத்தான் பதவி கொடுக்கப்படுகிறது. ஏனென்றால், ஆனந்த் சாரை தலைவர் 100 சதவீதம் நம்புகிறார். நான் 12 வருடமாக மக்கள் இயக்கம் காலத்தில் இருந்து இருக்கிறேன். ஆனால், நான் கட்சியில் இல்லை என்று ஆனந்த் சார் சொல்லிவிட்டார். ஏன் என்று நான் கேட்டபோது, நான் ரவுடி, அம்பேத்கர் நகரை சேர்ந்தவன் என கூறுகிறார்கள்.
நான் ரவுடியா?
எனது உரிமையை நான் கேட்டால் நான் ரவுடி? எது சொன்னாலும் ஆமா ஆமா என்று சொன்னால் நான் நல்லவன்? ஏன் என்று கேட்டால் ரவுடி. இது பொய்யாக இருந்தால் இதை வீடியோவாக பதிவிட்டு நான் வெளியிடுவேனா? மக்கள் இயக்கத்தில் இருந்தவர்கள் 50 சதவீதம் தற்போது கட்சிக்கு வெளியே இருக்கிறார்கள். மரியாதை இல்லாத இடத்தில் நாம் ஏன் இங்கே இருக்க வேண்டும் என வெளியே இருக்கிறார்கள்.
தலைவர் பாதிக்கப்படுவார்
மக்கள் இயக்கத்தில் இருந்தவர்களுக்கு நான் சொல்கிறேன். நீங்கள் இப்போது வெளியேறினால் பாதிக்கப்பட போவது தலைவர் தான். நீங்கள் உண்மையான தோழனாக ரசிகனாக தொண்டனாக இருந்தால் இதைப் பற்றி வெளியில் பேச வேண்டும். நம் தலைவரை நாம் காக்க வேண்டும் என்றால் நாம் இதனை வெளிப்படுத்த வேண்டும். தலைவருக்கு இது தெரிவதில்லை. அவருக்கு இந்த விஷயம் எதுவும் போய் சேருவதில்லை.
தலைமை எங்களை நாய் மாறி நடத்துகிறார்கள். தலைமைக்கு பிடித்தவர்களுக்கு மட்டும்தான் நல்லவிதமாக நடத்துகிறார்கள். காலை முதல் இரவு வரை இருக்க வைத்து செக்யூரிட்டியை வைத்து வெளியே துரத்துகிறார்கள். அப்பாயின்மென்ட் வாங்க ஆனந்த் சாருக்கு போன் செய்தால் அவர் எடுப்பதில்லை. அவருக்கு வேண்டியவர்கள் போன்களை மட்டுமே எடுக்கிறார். மற்றவர்கள் போனை எடுக்க மாட்டார். கட்சியில் என்ன நடக்கிறது என தலைவர் (விஜய்) நேரடியாக கலந்து ஆலோசிக்க வேண்டும்.” என அந்த