பிரம்மாண்டமான மாநாட்டு திடல்.., பார்த்து பார்த்து செதுக்கிய தவெக கட்சியினர்.!

தவெக மாநாட்டில் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மேற்கொள்ளாத ஏற்பாடுகள் தவெக மாநாட்டில் மிகவும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது.

TVK Maanadu

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டில் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மேற்கொள்ளாத ஏற்பாடுகள் தவெக மாநாட்டில் மிகவும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாடு தொடக்கம் முதல் இறுதி வரை முழுக்க முழுக்க கொள்கையை மையப்படுத்தியே அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாநாட்டில் தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன, அதற்கான ஒத்திகைகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

மாநாடு அமைக்கும் பணி தொடங்கிய நாளிலிருந்தே தவெகவினர் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் திரவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொன்றையும் பாத்து பாத்து சிற்பத்தை செதுக்குவது பில் செதுக்கி  உள்ளனர். அதன் காரணமாகவே, இந்த மாநாட்டை தமிழகம் மற்றுமின்றி ஒட்டு மொத்த அரிசியல் பிரமுகர்கள் மற்றும் மீடியா உன்னிப்பாக கவனித்த வருகிறார்கள்.

100 அடி கொடிக்கம்பம்

101 அடி கொடிக்கம்பத்தில், 20 அடி உயரம் 30 அடி அகலம் அளவில் கொடி ஏற்றப்படவுள்ளது. கொடிக்கம்ப உச்சியில் இடிதாங்கி பொருத்தப்படுகிறது. இந்த கொடியை ரிமோட் மூலமாக விஜய் ஏற்ற உள்ளார்.

மேலும், 25 வருடங்கள் கொடிக்கம்பம் துரு பிடிக்காமல் இருக்கும் வகையில் வேதியல் முளாம் பூசப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகள் கம்பம் அங்கேயே இருக்கும் வகையில் நில உரிமையாளரிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

கவனம் ஈர்க்கும் கட் அவுட்கள்

மாநாடு அரங்கில் அம்பேத்கர், பெரியார், காமராசருக்கு கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. கொள்கைத் தலைவர்கள், தமிழ் வரலாற்று ஆளுமைகளுக்கும் கட் அவுட், பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் வாசகத்தின் உருவக கட் அவுட், விடுதலை போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள், வீரமங்கை வேலு நாச்சியாருக்கும் கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளது.

தற்காலிக மொபைல் டவர்

பொதுமக்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால், தற்காலிக மொபைல் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்தவித நிகழ்விலும், கோவில் திருவிழாவிலும் இப்படி ஒரு சிறப்பு வசதியை ஏற்படுத்தியது இல்லை. சொல்ல போனால், அரசியல் மாநாடு வரலாற்றில் இதுபோல் ஒரு மாநாடு நடந்ததே இல்லை.

நுழைவாயிலில் தலைமைச் செயலகம்

ஏற்கனவே அங்கு வைக்கப்பட்டுள்ள கட் அவுட்டுகள் கவனம் ஈர்த்த நிலையில், மாநாட்டு அரங்கின் முகப்புத் பிரதான நுழைவாயிலில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் என்ற வாசகத்துடன் தன்னுடைய கொள்கைத் தலைவர்களுடன் விஜய் இருக்கும் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் வரலாற்று வீரர்களின் படங்கள்

த.வெ.க மாநாட்டின் நுழைவாயிலில் அழகு முத்துக்கோன், வேலு நாச்சியார், பெரும்பிடுகு முத்தரையர், சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், இராஜராஜ சோழன், தீரன் சின்னமலை, பூலித்தேவர், மருது சகோதரர்கள், ஒண்டிவீரன் ஆகிய 10 தமிழ் வரலாற்று வீரர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்