யானை ஒரு கட்சிக்கு சொந்தமானதா.? விஜய்-க்கு ஆதரவாக சீமான் ஆவேசம்.!

NTK Leaderr Seeman speech about TVK Flag issue

சென்னை : யானை ஒரு மாநிலத்திற்கோ, ஒரு கட்சிக்கோ சொந்தமில்லை என விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் நேற்று தனது கட்சிக் கொடி, கட்சிப் பாடல், உறுதிமொழி ஆகியவற்றை வெளியிட்டார். த.வெ.க கட்சிக்கொடியில் இடம்பெற்றுள்ள யானைகள், வாகை மலர், கொடியின் நிறம் பற்றிய விளக்கங்களை மாநாட்டில் அறிவிப்பதாகஅவர் கூறினார்.

அதற்குள், இணையவாசிகள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரையில் த.வெ.க கட்சிக்கொடி பற்றி தங்களுக்கு தெரிந்த விளக்கங்களை கூறி வருகின்றனர். தவெக கட்சிக்கொடியில் இடம்பெற்றுள்ள யானை படமானது எங்கள் தேர்தல் சின்னம் என்றும், அதனை விஜய் பயன்படுத்த கூடாது என்றும் பகுஜன் சமாஜ்வாடி கட்சியினர் கூறி வருகின்றனர். அடுத்ததாக, ஸ்பெயின் நாட்டின் கொடியை விஜய் அவமதித்து விட்டார். கேரள போக்குவரத்துத் துறை சின்னத்தை விஜய் பயன்படுத்தியுள்ளார் என சென்னை காவல்துறை ஆணையகரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இப்படியிலான சூழலில் விஜயின் த.வெ.க கட்சிக்கொடி விவகாரம் பற்றி இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விஜய்க்கு ஆதரவான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ” விஜய் கொடி அறிமுகப்படுத்தியதில் என்ன சர்ச்சை? யானை ஆப்பிரிக்காவில் மட்டும் தான் இருக்கிறதா? இங்கு இல்லையா? யானையை எந்த ஒரு தனி மனிதனும், கட்சியும், மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது.

தேர்தல் ஆணையத்திடம் நான் புலி சின்னம் கேட்டேன். அது தேசிய விலங்கு என்றார்கள். மயில் கேட்டேன் தேசிய பறவை என்றார்கள். அப்படியென்றால் தேசிய மலர் தாமரையை மட்டும் ஏன் பாஜகவுக்கு கொடுத்தீர்கள் என்றேன். சங்ககாலத்தில் நாம் யானைப் படை தான் வைத்திருந்தோம். நம் மன்னன் அருள்மொழி சோழன்  60 ஆயிரம் யானைகளைக் கொண்டு போர் புரிந்தான். நாம் யானைப்படை பார்த்து எதிரிகள் ஓடினர்.

அப்படிப்பட்ட நாம் யானை படத்தை வைத்திருக்க முடியாதா? அந்த உரிமை என் தமிபிக்கு இல்லையா? அந்த மலர் வாகை மலராக இருந்தால் என்ன? தூங்குமூஞ்சி மலராக தெரிந்தால் என்ன? யானைப்படை கொண்டு போர் புரிந்து வெற்றி வாகை சூடினோம் என புறநானூற்றில் இருக்கிறது. ” என த.வெ.க கொடி விவகாரம் குறித்து சீமான் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்