10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை விரைவில் சந்திக்க உள்ளதாக நடிகர் நடிகரும் தவெக தலைவருமான விஜய் அறிவித்துள்ளார். ஆனால், அதற்கான தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இது தொடர்பாக அவரது கட்சியின் எக்ஸ் பதிவில், 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்த அவர், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தார். அத்துடன், விரைவில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவரது கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன் என்று குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.
விஜய் மாணவர்களை சந்திப்பது இது முதல் முறையல்ல, இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த 234 தொகுதியில் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் பாராட்டுச் சான்றிதழ்களும், உதவித்தொகையும் வழங்கி சிற்பித்ததோடு, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இது அரசியல் ரீதியாக மிகவும் பெரியதாக பேசப்பட்டது, விஜய் தற்பொழுது நடிப்பில் ஒரு கவனம் செலுத்தி வந்தாலும், அவவ்போது கட்சியின் செல்பாடுகளையும் கவனம் செலுத்தி வருகிறார்.
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…
சென்னை : இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய படங்களுக்கு இசையமைத்து கொடுத்துவிட்டு படம் வெளியாகும் இரண்டு நாள் அல்லது ஒரு நாள் முன்பு…