10, 12ஆம் வகுப்பு மாணவர்களை விரைவில் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.!

Actor Vijay

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை விரைவில் சந்திக்க உள்ளதாக நடிகர் நடிகரும் தவெக தலைவருமான விஜய் அறிவித்துள்ளார். ஆனால், அதற்கான தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இது தொடர்பாக அவரது கட்சியின் எக்ஸ் பதிவில், 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்த அவர், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தார். அத்துடன், விரைவில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவரது கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன் என்று குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

விஜய் மாணவர்களை சந்திப்பது இது முதல் முறையல்ல, இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த 234 தொகுதியில் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் பாராட்டுச் சான்றிதழ்களும், உதவித்தொகையும் வழங்கி சிற்பித்ததோடு, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இது அரசியல் ரீதியாக மிகவும் பெரியதாக பேசப்பட்டது, விஜய் தற்பொழுது நடிப்பில் ஒரு கவனம் செலுத்தி வந்தாலும், அவவ்போது கட்சியின் செல்பாடுகளையும் கவனம் செலுத்தி வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்