திமுகவை ஃபாலோ செய்யும் விஜய்? சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.!

தமிழ் மாதம் சித்திரை முதல் நாளில் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் என தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.

TVK Leader Vijay - Happy Chithirai Day wishes

சென்னை : இன்று ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழ் மாதமான சித்திரை 1ஆம் தேதியை, ஒரு பகுதியினர் தமிழ் புத்தாண்டு தினமாகவும், ஒரு தரப்பினர் சித்திரை திருநாள் தினமாகவும் கொண்டாடி வருகின்றனர்.

2008ஆம் திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தை மாதம் 1ஆம் தேதியான பொங்கல் திருநாள், உழவர் தினத்தை தமிழ் புத்தாண்டு தினம் என அறிவித்தார். அதனை அடுத்து 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக முதலமைச்சர் ஜெயலலிதா ரத்து செய்து சித்திரை 1ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்தார்.

இதனால், தமிழ்நாட்டில் சித்திரை 1ஆம் தேதியானது திமுக சார்பு வட்டாரத்தில் சித்திரை திருநாள் என்றும், அதிமுக சார்பு வட்டாரத்தில் தமிழ்ப்புத்தாண்டு தினம் என்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தமிழ் புத்தாண்டு தின வாழ்த்தை தெரிவித்து உள்ளனர்.

இப்படியான சூழலில், தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், தனது சமூக வலைதள பக்கத்தில் தற்போது, “அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்!” எனப் பதிவிட்டுள்ளார். இதனால் விஜய் திமுகவை ஃபாலோ செய்கிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுப்பப்பட்டு வருகிறது.

தை மாதம் 1ஆம் தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் வைத்தது தந்தை பெரியார் தான். அவர் தான் சித்திரை 1ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவதை விட, தை 1ஆம் தேதி உழவர் திருநாளில் தமிழ் புத்தாண்டை கொண்டாடுவது தான் பொருத்தமாக இருக்கும் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியாரை கொள்கை தலைவராக கொண்டுள்ள விஜய் அதன்படியே சித்திரை 1ஆம் தேதியான இன்று சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார் என்றும் சிலர் கூறிவருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்