“TVK vs DMK., மன்னராட்சி ஸ்டாலின்., சீக்ரெட் ஓனர் மோடி.,” பொதுக்குழுவில் விஜய் ஆவேசப் பேச்சு!
தமிழ்நாட்டில் மன்னராட்சி செய்கிறார் மு.க.ஸ்டாலின், மத்தியில் பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்து கொள்ளையடிக்கிறார் என நேரடியாக குறிப்பிட்டு தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை : இன்று (மார்ச் 28) தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன் , கட்சியின் மாநில, மாவட்ட தவெக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த முதல் பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக , மாநிலத்தில் ஆளும் திமுக கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த முறை அவர் பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி பெயர்களை குறிப்பிட்டே பேசினார்.
தமிழ்நாட்டை சுரண்டும் திமுக
அவர் பேசுகையில், தமிழ்நாடு இப்போது இருக்கும் சூழலில் புதிய வரலாற்றை படைக்க தயாராகி வருகிறது. அரசியல் என்றால் ஒவ்வொரு குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான். அனால் இங்கு ஒரே ஒரு குடும்பம் மட்டும் நன்றாக இருக்க தமிழ்நாட்டை சுரண்டி கொண்டிருக்கிறார்கள் இதுதான் அவர்கள் அரசியல். ஆனால் நம்ம அரசியல் அனைவருக்குமான அரசியலாக இருக்கும்.
மக்கள் விரோத ஆட்சியை மன்னராட்சி போல நடத்துகிறார்கள். தவெக மாநாடு முதல் தவெக பொதுக்குழு வரை தடைகள் கொடுக்கிறார்கள். தடைகளை தாண்டி தொடர்ந்து தவெக நிகழ்ச்சிகள் நடக்கும். மாண்புமிகு மன்னராட்சி முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பேரை மாட்டும் வீராப்பா சொன்ன பததாது. செயலில் கட்ட வேண்டும். பாஜக செய்வது பாசிச ஆட்சி என்றால் நீங்கள் செய்வதும் அதே பாசிச ஆட்சி தானே.
தடை போட நீங்கள் யாரு?
நான் மக்களை பார்க்க தடை போட நீங்கள் யாரு? எந்தக்கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை எங்களுக்கு தருகிறீர்கள். ஆற்றை தடுக்கலாம். காற்றை தடுக்க முடியாது. தடுக்க நினைத்தால் அது சூறாவளியாக மாறும். தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் நிலைமையை பார்த்தால் சட்ட ஒழுங்கு இருக்கின்றதா என்பதே தெரியவில்லை. தமிழ்நாட்டில் மக்களாட்சி மலரும். இவங்கள மாத்தணும்.
கட்சி நிர்வாகிகளே முதலில் உங்கள் பகுதி பிரச்சனையை பாருங்கள். அதனை தீர்த்து வையுங்கள். பிறகு எங்கும் தவெக கொடி பறக்கும். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளால் பெண்கள் வெளியில் வர முடியவில்லை. அவங்க தான் உங்கள் அரசியலுக்கு முடிவு கட்ட போறாங்க.
எண்ணற்ற போராட்டங்கள்
இங்க எத்தனை போராட்டங்கள்? பரந்தூர் போராட்டம், போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம், மீனவர்கள், போக்குவரத்துதுறை, ஆசிரியர்கள், சாதிவாரி கணக்கெடுப்பு, சாம்சங், டங்ஸ்டன், இஸ்லாமியர்கள், செவிலியர்கள் என போராட்டங்களை சொல்ல இந்த நாள் பத்தாது. எல்லா போராட்டத்திற்கும் தவெக துணை நிற்கும்.
சீக்ரெட் ஓனர் மோடி
உங்கள் (திமுக) சீக்ரெட் ஓனர் மாண்புமிகு மோடி ஜி அவர்களே, உங்க பேற சொல்ல எங்களுக்கு என்ன பயமா? காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி, கொள்ளையடிக்க பாஜகவுடன் மறைமுக கூட்டணி. தமிழகம் என்றாலே மத்தியில் அலர்ஜி. ஜிஎஸ்டி மட்டும் சரியாக வாங்குவீங்க. ஆனால் , நிதி தர மாட்டீங்க. மும்மொழி கொள்கையை இங்கு திணிப்பீங்க.
ஒரே நாடு ஒரே தேர்தல் என நீங்க கொண்டு வரும்போதே மோடி சார் உங்கள் திட்டம் தெரிஞ்சிடுச்சி. தமிழ்நாடு பல பேருக்கு தண்ணி காட்டுன ஸ்டேட் சார்.
TVK vs DMK :
தவெக ஆட்சி உண்மையாக மக்களாட்சி இருக்கும். தவெக தரும் முதல் வாக்குறுதி பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் தருவோம். சட்ட ஒழுங்கு கடுமையாக வைத்திருப்போம். அரசு ஊழியர்கள் பக்கம் துணையாக நிற்போம். தமிழ்நாடு விவசாய பூமி. இங்கு மண்ணையும் மக்களையும் பாதிக்கும் திட்டத்தை கொண்டு வர மாட்டோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே., ஒன்னு TVK இன்னொன்று DMK என முதல் பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார்.