திமுகவின் கோரிக்கைகளை பிரதிபலித்தாரா தவெக தலைவர் விஜய்.? நீட் விலக்கு., மாநில உரிமை…

Published by
மணிகண்டன்

சென்னை: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, மாநில உரிமைகள், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு கருத்துகளை தவெக தலைவர் விஜய் இன்றைய விழாவில் குறிப்பிட்டார்.

இன்று தமிழக அரசியலில் முக்கிய செய்தியாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறியதாக தான் இருக்கும். அது மட்டுமில்லாமல், தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்த தீர்மனத்திற்கு தனது முழு ஆதரவு என தெரிவித்ததும் பல்வேறு அரசியல் கேள்விகளை எழுப்பியுள்ளன.

கல்வி விருது விழா :

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு உதவி தொகை மற்றும் விருது வழங்கும் விழா முன்னதாக 21 மாவட்டங்களுக்கு 28ஆம் தேதி நடைபெற்றது. அதனை அடுத்து 2ஆம் கட்டமாக 18 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 700 மாணவ, மாணவியர்களுக்கு இன்று கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

விஜய் பேசியது என்ன.?

சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், நீட் நுழைவுத்தேர்வால் கிராமப்புற ஏழை மாணவ, மாணவியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். நீட் மாநில உரிமைக்கு எதிரானது என்றும், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றார் வகையில் கல்வி திட்டம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தீர்மானத்திற்கு முழு ஆதரவு :

மேலும், மாநில மொழியில் படித்துவிட்டு மத்திய அரசு பாடத்திட்டத்தில் தேர்வு வைத்தால் மாணவர்களுக்கு அது எப்படி சாத்தியமாகும்.? என்றும் கேள்வி எழுப்பினார்.  சமீபத்திய நீட் குளறுபடியால் நீட் மீதான நம்பகத்தன்மை மக்களுக்கு முற்றிலும் அழிந்துவிட்டது. நீட் விலக்கு என்பதே இதன் ஒரே தீர்வு என்று குறிப்பிட்ட விஜய், அடுத்ததாக, நீட் விலக்கு குறித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு முழு ஆதரவு என வெளிப்படையாக ஆளும் திமுக அரசின் நீட் விலக்கு நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்தார்.

மாநில உரிமை :

மேலும், சிறப்பு பொதுப்பட்டியல் உருவாக்கி கல்வி, சுகாதாரம் மட்டும் அதில் சேர்க்க வேண்டும். அனைத்து துறைகளும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசுக்கும் உரிமைகள் தரப்பட வேண்டும் என்று மாநில உரிமை பற்றியும் பேசினார். இவை என்னுடைய கோரிக்கை மட்டுமே என்றும் இது உடனடியாக நடக்காது நடக்கவும் விட மாட்டார்கள் என்றும் தனது அரசியல் பேச்சில் விஜய் குறிப்பிட்டார்.

திமுகவின் நிலைப்பாடு :

ஆளும் திமுக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தான் நீட் தேர்வு குளறுபடிகள் குறித்தும் , நீட் தேர்வுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். மேலும், நீட் தேர்வுக்கு எதிராக இன்று (ஜூலை 3) திமுக சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மேலும்,மாநில உரிமைகள் மீட்கப்பட வேண்டும், கல்வி பொதுப்பட்டியலில் இருந்து நீக்கி அதனை மாநில பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகளின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. இப்படியான சூழலில் இதே கருத்தை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேடையில் பேசியிருப்பது நீட் விவகாரத்தில் திமுக நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

குட் பேட் அக்லி படத்தில் எமோஷனல் இருக்கு! ரசிகர்கள் தலையில் குண்டை தூக்கிப்போட்ட ஆதிக்!

சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…

32 minutes ago

தோனி இருக்கும்போது சென்னையை கட்டுப்படுத்திட்டாரு! ரியான் பராக்கை புகழ்ந்த சுரேஷ் ரெய்னா!

குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…

1 hour ago

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1,700 உயர்வு!

பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…

2 hours ago

பாஜக அரசு தீட்டும் சதிதிட்டங்கள்…கடுமையாக விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…

2 hours ago

CSKvsRR: கடைசி நேரத்தில் சொதப்பிய சென்னை! தோல்விக்கான முக்கிய காரணங்கள்?

குவஹாத்தி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சற்று தடுமாறி விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும்…

3 hours ago

#RRvCSK: தொடர் தோல்வியில் சென்னை… முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்..!

இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…

9 hours ago