“அவங்க பாசிசம்னா., நீங்க பாயாசமா.?” திமுகவை நேரடியாக விளாசிய விஜய்.!
திராவிட மாடல்னு சொல்லி சுரண்டி கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலகூட்டம் தான் நம்மளோட அரசியல் முதல் எதிரி. - தவெக தலைவர் விஜய்.
விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக கட்சித் தலைவர் விஜய் மிக ஆவேசமாக தனது முதல் அரசியல் உரையை பேசி முடித்தார். அப்போது மதவாத பிளவுவாத அரசு பாசிச அரசு என பாஜகவையும், முகமூடி அரசு என ஆளும் திமுக அரசையும் மறைமுகமாகவும், நேரடியாகவும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
விஜய் பேசுகையில், “மதவாத அரசியல் பேசுறவங்கல நாம கண்டுபிடிச்சிறலாம். ஆனால்., ஊழல் பண்றவங்கள நம்மளால கண்டுபிடிக்கவே முடியாது. கொள்கை வேஷம் போடுவாங்க, முகமூடி தான் அவங்க முகமே. அவங்க தான் இப்போ நம்மள ஆண்டுகொண்டு இருக்கிறாங்க. நமது முதல் எதிரி பிளவுவாத அரசியல். இன்னொரு எதிரி ஊழல்வாதி கபடதாரி.
அவங்க பாசிசம்னா, நீங்க என்ன பாயாசமா.? நீங்களும் அவங்களுக்கு ஒன்னும் சளச்சவங்க இல்ல. மக்கள் விரோத ஆட்சிய திராவிட மாடல் அரசுனு சொல்லிட்டு மக்களை ஏமாத்துறீங்க. எங்களுக்கு எந்த சாயமும் நீங்க பூச வேண்டாம். நாங்க ஏற்கனவே எங்களுக்கு ஒரு கலர் கொடுத்திருக்கோம். ஏ.பி, சி.டி டீம்னு எங்க மேல அவதூறு பரப்ப முடியாது.
திராவிட மாடல்னு சொல்லி., தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பெயரை சொல்லி சுரண்டி கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலகூட்டம் தான் நம்மளோட அரசியல் முதல் எதிரி. ” என தவெக மாநாட்டு நிகழ்வில் தவெக தலைவர் விஜய் திமுக அரசை நேரடியாகவும், பாஜகவை மறைமுகமாகவும் கடுமையாக தாக்கி பேசினார்.