“நாடகம் ஆடுவதில் நீங்க கில்லாடி ஆச்சே..,” திமுக மீது விஜய் நேரடி அட்டாக்!

எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியாக ஒரு பேச்சு என மாறி மாறி பேசுவதாக திமுக மீது நேரடியாக விமர்சனம் செய்தார் தவெக தலைவர் விஜய்.

TVK Leader Vijay - TN CM MK Stalin

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று  மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் 13 கிராம மக்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல் கருத்துக்களையும், பரந்தூர் விமான நிலையம் ஏன் அமைய கூடாது என்ற தனது நிலைப்பாட்டையும் முன்வைத்து பேசினார்.

அப்போது மத்திய மாநில அரசுகள் மீதான தனது விமர்சனத்தையும் முன்வைத்தார். விஜய் பேசுகையில், “ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் நான் சொல்லி கொள்வது என்னவென்றால் விமான நிலையம் வர வேண்டாம் என நான் சொல்லவில்லை. விமான நிலையம் இங்கே வர வேண்டாம் என்று தான் நான் கூறுகிறேன். இதனை நான் கூறவில்லை என்றால் நான் எதோ வளர்ச்சிக்கு எதிரானவன் என்று கதை கூறி விடுவார்கள் ” என விமர்சனம் செய்தார்.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை குறிப்பிட்டு பேசிய விஜய், ” அரிட்டாபட்டி போல பரந்தூர் பகுதி மக்களும் நம்ம மக்கள் தானே? எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாய நிலத்துக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது விளைநிலங்களுக்கு எதிர்ப்பா? ” என கூறிவிட்டு,

” உங்க நாடகத்தை பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்க உங்க வசதிக்காக அவர்கள் (விவசாயிகள்) பக்கம் நிற்பதும், நிற்காமல் இருப்பதும் நாடகம் ஆடுவதும் உங்கள் விருப்பம். நம்புகிற மாதிரி நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடி ஆச்சே.” என ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்த விஜய், ” இத்தனை எதிர்ப்பையும் மீறி விமான நிலையம் அமைக்கிறார்கள் என்றால் , அதனையும் தாண்டி இந்த திட்டத்தில் எதோ ஒரு லாபம் அவர்களுக்கு இருக்கிறது .” என ஆளும் அரசு மீதான தனது குற்றச்சாட்டையும் முன்வைத்தார் தவெக தலைவர் விஜய்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்