பாஜக – திமுகவை நேரடியாக அட்டாக் செய்த – தவெக தலைவர் விஜய்.!

மணிப்பூர் விவகாரம் மற்றும் வேங்கைவயல் விஷயத்தை எடுத்துரைத்து பாஜகவையும், திமுகவையும் நேரடியாக விமர்சித்திருக்கிறார் தவெக தலைவர் விஜய்.

Vijay - MODI -STALIN

சென்னை:  சென்னையில் நடைபெற்ற “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூலை’ தவெக தலைவர் விஜய் வெளியிட, அதனை ஆனந்த் டெல்டும்டே, ஓய்வு பெற்ற நீதிபதி சந்தூரு பெற்றுக்கொண்டனர். அதன்பின், தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் விவகாரத்தை வெளிக்கொண்டு வந்தவர்களுக்கு அம்பேத்கர் புத்தகத்தை விஜய் வழங்கினார்.

புத்தகம் வழங்கியபோது, விஜய்யுடன் வேங்கைவயலை சேர்ந்த பெண் கண்ணீருடன் பேசினார். இதனால், கலங்கிய அவர் அப்பெண்ணுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், விழா மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய், “அம்பேத்கர் நூல் வெளியிட்ட விழாவில் பங்கேற்றது ஒரு வரமாக நினைக்கிறேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

சாதி படிநிலையால் அம்பேத்கர் பட்ட கஷ்டங்களை குறிப்பிட விஜய், வன்மத்தை மட்டும் காட்டிய இந்த சமூகத்திற்கு அம்பேத்கர் திரும்பி என்ன செய்தார் என்பதை நினைத்தால் மெய்சிலிர்கிறது எனக் கூறினார். அம்பேத்கர் பற்றி யோசிக்கும்போது, சட்டம் ஒழுங்கு, சமூகநீதியை பற்றி யோசிக்காமல் இருக்க முடியாது.

இன்றும் மணிப்பூரில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை கண்டுகொள்ளாத அரசு நம்மை மேல் இருந்து ஆண்டு கொண்டிருக்கிறது. மணிப்பூர் விவகாரத்தைக் கண்டே கொள்ளாமல் மத்தியில் ஆட்சியில் செய்துவருகிறார்கள்.

வேங்கைவயல் விஷயத்தில் இங்கிருக்கும் சமூக நீதி அரசும் ஒன்றும் செய்யவில்லையே, இதையெல்லாம் அம்பேத்கர் பார்த்திருந்தால் வெட்கித் தலைகுனிந்திருப்பார். மத்தியில் தான் அப்படியென்றால், இங்கு சமூக நீதி பேசும் அரசு, வேங்கைவயல் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று பாஜகவையும், திமுகவையும் நேரடியாக விமர்சித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்