“தலைவா…தலைவா”…கரகோஷத்துடன் மாநாட்டு மேடையில் வருகை தந்த தவெக தலைவர் விஜய்!

த.வெ.க மாநாட்டில் தலைவா..தலைவா என்ற தொண்டர்கள் கரகோஷத்துடன் விஜய் மாநாடு மேடைக்கு வருகை தந்தார்.

vijay entry

விழுப்புரம் : தமிழ்நாடு திரும்பி பார்க்கும் வகையில், தமிழக வெற்றிகழகத்தின் முதல் மாநாடு பிரமாண்டமாக விக்ரவாண்டி வி சாலை பகுதியில் நடைபெற்று வருகிறது. தவெக மாநாட்டில் இதுவரை சுமார் 8 லட்சம் பேர் வருகை என காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, மாநாட்டில் கலந்துகொள்வதற்கு கட்சி தலைவர் விஜய்  நேற்றே மாநாடு வளாகத்தில் முகாமிட்டுத் தங்கியிருந்தார். அத்துடன் மாநாடு பணிகள் சரியாக நடக்கிறதா? என்பது பற்றியும் ஆய்வு செய்தார். இதனையடுத்து, இன்று இரண்டாவது நாளாகவும் மாநாடு நடைபெறும் இடத்தில் முகாமிட்டுத் தங்கியிருந்த நிலையில், தற்போது மாநாட்டில் கலந்துகொள்ள தயாராக இருக்கிறார்.

எப்போது மாநாடு தொடங்கும் என தொண்டர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், மாநாடு சரியாக 3 மணிக்கு கலை நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது.   பிரமாண்டமாக தொடங்கப்பட்டு இருக்கும் இந்த மாநாட்டிற்கு விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாயார் ஷோபனா ஆகியோர் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.

எப்போது விஜய் வருவார் என பலகோடி ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.  அப்போது, கட்சி பாடல் ஒலிக்க தொண்டர்களின் தலைவா…தலைவா என்ற கரகோஷத்துடன் விஜய் மாநாடு  நடைபெறும் மேடைக்கு  வருகை தந்தார். வந்தவுடன் தனது தொண்டர்களுக்கு கை அசைத்து நலம் விசாரித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk maanadu live
TVKMaanadu VIJAY Speech
Thalapathy Vijay
TVKMaanadu vijay song
Tamilaga Vettri Kazhagam Ideology Song
TVK Uruthimozhi
TVK Maanadu Vijay