தவெக முதல் மாநாடு : பணிகளை தீவிரமாய் கண்காணிக்கும் தலைவர் விஜய்?

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் தவெக முதல் மாநாட்டுக்கான பணிகளைத் தீவிரமாய் விஜய் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

TVK Vijay - TVK Maanaadu

சென்னை : தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் அனைவரது கண்ணும் விழுப்புரம் விக்ரவாண்டியை நோக்கியே இருந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் த.வெ.கவின் முதல் மாநாடாகும். த.வெ.க கட்சியைத் தொடங்குவதற்கு முன்பே கட்சியின் அடித்தளத்துக்காக பலத் திட்டங்களை முன்பே திட்டமிட்டு அரசியல் களத்தில் விஜய் குதித்துள்ளதாக கூறப்படுகிறது.

வெற்றிக் கொள்கை திருவிழா :

அதன்படி, கட்சித் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை அக்கட்சி தலைவர் விஜய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சிந்திக்க வைக்கும் வண்ணமே அமைந்துள்ளது. மேலும், கட்சியைத் தொடங்கியது முதல் அனைவரும் கேட்கும் கேள்விக் கட்சியின் முதல் மாநாடு எப்போது. தற்போது, அதுவும் முடிவாகி அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக விழுப்புறம் விக்ரவாண்டியில் முடிவடையும் கட்டத்தை எட்டியுள்ளது.

த.வெ.க வின் மாநாடு வரும் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, பல அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என இந்த முதல் மாநாட்டிற்கு அவர்களது வாழ்த்துக்களை கட்சித் தலைவரான விஜய்க்கு தெரிவித்து கொண்டே வருகின்றனர்.

கண்காணிக்கும் விஜய் :

வரும் ஞாற்றுக்கிழமை இந்த மாநாடு நடைபெற இருப்பதால், மாநாட்டிற்கு 10,000 ரசிகர்கள் வரை வருகை தர இருக்கிறார்கள். இதனால், எந்த வித அசம்பாவிதமும் நடைபெற கூடாது என முன்னரே அனைத்து வித ஏற்பாடுகளையும் தலைவர் விஜயின் அறிவுறுத்தலால் நிர்வாகிகள் பொறுப்பேற்று செய்து வருகின்றனர்.

அதில், குறிப்பாக 150 மருத்துவர் அடங்கிய மருத்துவக்குழு மாநாட்டில் பணியில் இருப்பார்கள் என தவெக கட்சியின் பொதுச்செயலாளரான என்.ஆனந்த் தெரிவித்திருந்தார். மேலும், இன்று ஆனந்த் மாநாடு நடைபெறவுள்ள இடத்திற்கு நேரில் சென்று மாநாடு பணிகள் எவ்வாறு செல்கிறது என பார்வையிட்டார்.

இந்த நிலையில், அனைவரின் கவனமும் பார்வையும் விஜயின் மீது திரும்பி இருக்கிறது. அவர் நேரில் சென்று பணிகள் எவ்வாறு நடக்கிறது என பார்வை இடுவாரா? என எதிர்பார்ப்பு இருந்தது.

அதைத் தொடர்ந்து மேற்கொண்டு ஒரு தகவலும் வெளியானது. அதில், த.வெ.க. தலைவர் விஜய் சி.சி.டி.வி. வாயிலாக விக்ரவாண்டியில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் பணிகளை கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பெண்களுக்கு முக்கியத்துவம் :

விஜய், கள ஆய்வு செய்ய நேரில் இறங்காவிட்டாலும் சி.சி.டி.வி வாயிலாக இப்படி கண்காணித்ததோடு மேற்கொண்டு அம்மாநாட்டில் அடிப்படைத் தேவையாக அமையும் அனைத்து விதமான வசதியையும் அங்கு செய்யுமாறு நிர்வாகிகளுக்கு விஜய் அறிவித்தாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பே, விஜய் மாநாடு தொடர்பாக வெளியிட்டுள்ள செய்து குறிப்பில் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் போன்றவர்கள் வீட்டிலிருந்தே மாநாட்டை காணுமாறு அன்பு கட்டளைப் போட்டிருந்தார். இதனை வைத்து பார்க்கையில், அவர் பெண்களுக்கு தனது முதல் முக்கியத்துவத்தை கொடுக்கிறார் என்பது தெரிகிறது.

அதே போல, அவர் தற்போது மாநாட்டில் எடுத்துள்ள இந்த அடிப்படைத் தேவைக்கான நடவடிக்கையை பார்த்தாலும் பெண்களுக்கே முதல் முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிகிறது. அதாவது, மாநாட்டில் அடிப்படைத் தேவையாக கழிப்பறை, குடிநீர், மருத்துவ உதவி, பார்க்கிங் வசதிகள் என அனைத்திலும் எந்த வித குறையும் வந்து விடக் கூடாது என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொறுப்பாளர்களுக்கு முக்கிய செய்தி?

இதனைத் தாண்டி, த.வெ.க கட்சியின் மாவட்ட அளவிலான அனைத்து பொறுப்பாளர்களும் அவர் அவர்களுக்கு அறிவித்துள்ள பணிகளை திட்டமிட்டபடி செய்யவேண்டும் எனவும் அப்படி செய்யாவிட்டால் எந்த வித யோசனையுமின்றி அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இதனை மனதில் வைத்து கொண்டுஅனைத்து பொறுப்பாளர்களும் அவர்களது பணியை தீவிரமாக செய்து வருகின்றனர். விஜய்யின் இந்த தலைமை பண்புகள், குறிப்பாக கல்வி மற்றும் பெண்களுக்கான முக்கியத்துவம் அடங்கிய இந்த தலைமை பண்புகள் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி, உட்பட பலரையும் சிந்திக்க வைத்துள்ளது என்றே கூறலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்