தவெக கல்வி விருது விழா: அனுமதிச் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்.!

vijay education award

சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே ஆறாம் தேதியும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியானது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவ்ர்களை  மாணவர்களை விரைவில் சந்திக்கவுள்ளார்.

கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சந்தித்த நடிகர் விஜய், அரசியலில் கால் பதித்து முதல் முறையாகவும், இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக தவெக சார்பில் கல்வி விருது விழா நடத்தப்பட உள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10, +2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, நடிகரும், தவெக தலைவருமான விஜய் பரிசளிக்க உள்ளார். கடந்த ஆண்டு தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை தேர்வு செய்ததில் சில குளறுபடி ஏற்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு நடந்துவிடக் கூடாது என்பதால், மாவட்ட வாரியாக மாணவர்களை தேர்வு செய்ய இணையதள லிங்க் அனுப்பப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ஜூன் 28ஆம் தேதி விழா நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க உள்ள மாணவர்கள், பெற்றோருக்கான அனுமதிச் சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் 2வது கட்ட விழா ஜூலை 3-இல் நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்