விஜய் இல்லாமல் தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்.!
விஜய் தலைமையில் தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று பனையூரில் நடைபெறுகிறது.
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த ஏற்பாடு முடிவு செய்துள்ளது. வருகிற 2026 சட்டமன் தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், இந்த நிலையில், தவெக நிர்வாகிகளுடன் விஜய் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார் என்று முன்னதாக தகவல் வெளியாகிருந்த நிலையில், படப்பிடிப்புக்கு செல்ல இருப்பதால் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க… மறுபக்கம், விஜய்க்கு அரசியல் வியூகங்களை வகுத்து வந்த ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக ஆடியோ லீக்காகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆரோக்கியசாமி பேசியதாக கூறப்படும் அந்த ஆடியோவில், “விஜயே சொன்னாலும் புஸ்ஸி ஆனந்த் சார் வந்து ‘இந்த கேண்டிடேட்ட ஜெயிச்சு கொடுங்கடா’ என சொன்னால்தான் தொகுதியிலேயே நிறுத்துவங்க. இப்டியே போனா 2% ஓட்டு கூட தவெக வாங்காது” என்று அவர் கூறியிருந்தார். இது அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இன்று பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.