“தவெகவும் விசிகவும் ஒரே கொள்கைகளை தான் பேசுகிறது!” திருமாவளவன் பேட்டி!
ஆதவ் அர்ஜுனா உடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "பெரியார், அம்பேதகர் கொள்கைகளை தவெகவும், விசிகவும் பேசுகிறது" எனத் தெரிவித்தார்.

சென்னை : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய், முக்கிய அரசியல் பிரமுகர்களை நியமனம் செய்தார். அதில் முக்கிய நபராக இருந்தவர் விசிக துணை பொதுச்செயலாளரலாக இருந்து அதன் பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டது.
தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் ஆதவ் அர்ஜுனா, தனது ஆஸ்தான அரசியல் தலைவரான விசிக தலைவர் திருமாவளவனை நேற்று சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. விஜயுடன் பகிர்ந்துகொண்ட அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அரசியல் பேச வேண்டாம் என திருமா அறிவுறுத்தியும் ஆதவ் அர்ஜுனா மேடையில் அரசியல் பேசிய காரணத்தாலேயே விசிகவில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆதவ் அர்ஜுனா பேட்டி :
இப்படியான நிலையில், நேற்று மாலை திருமாவளவன் – ஆதவ் அர்ஜுனா சந்திப்பு விசிக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பு முடிந்ததும், ஆதவ் அர்ஜுனா – திருமாவளவன் ஆகிய இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், ” தலைவர் அண்ணன் என்னுடைய ஆசான் திருமாவளவன். ஒரு தம்பியாக அவரிடம் வாழ்த்து பெறுவதற்கும், ஆசி பெறுவதற்கும் இங்கு வந்துள்ளேன். இங்கு தான் கள அரசியலை கற்றுக் கொண்டேன். ஒரே கருத்தியல் ரீதியாக பெரியார் கொள்கையையும் அம்பேத்கர் கொள்கையும் தவெக பயணித்து வருகிறது. கொள்கை ரீதியான பயணத்தை அண்ணனிடம் தான் கற்றுக் கொண்டேன். வாழ்த்து சொன்னார். பத்து வருட வேலையை பத்து மாசத்தில் செய்ய வேண்டும்.” என 2025 தேர்தல் பற்றியும் ஆதவ் அர்ஜுனா பேசினார் .
திருமாவளவன் பேட்டி :
இதனை அடுத்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ” இந்த சந்திப்பை அரசியலாக பேச வேண்டாம். தமிழக அரசியலில் புதிய அணுகுமுறையை தொடங்க வைத்துள்ளார் ஆதவ் அர்ஜுனா. பொதுவாக ஒரு கட்சியில் இருந்து விலகினாலோ விலக்கி வைத்தாலோ அதை பகையாக கருதுகிற பாரம்பரியம்தான் அரசியல் அணுகுமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் ஆதாவ் அர்ஜுனா கட்சியை விட்டு வெளியேறக் கூடிய சூழல் எழுந்த நிலையிலும், அதனைக் கூட ஒரு பகையாக கருதாமல், வலிகள் இருந்தாலும் அதனை எதிராக நிறுத்தவில்லை.
தான் இன்னொரு கட்சியில் சேர்ந்து பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்ற, இந்தச் சூழலிலும் உங்களுடைய வாழ்த்தும் எங்களுக்கு தேவையான என அலுவலகம் தேடி வந்துள்ளார். இது தமிழக அரசியல் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பாடமாக கருதுகிறேன். கருத்தியல் ரீதியாக எவ்வளவு முரண்கள் இருந்தாலும் களத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் இத்தகைய நட்புறவை பேணுவது ஒரு நாகரீகமான அணுகுமுறை அந்த வகையில் ஆதாவ் அர்ஜுனாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
இந்த அரசியல் நாகரீகத்தை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். களத்தில் கடுமையாக முரண்பட்டாலும் கூட, அதனை பகையாக ஏற்றுக் கொள்ளக் கூடாது. இங்கு வந்து, தான் இந்த முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலையை சுட்டிக்காட்டி, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கை வழியில் தமிழக வெற்றிக் கழகமும், விடுதலை சிறுத்தைகளும் ஒரே கொள்கைகளை பேசுகிறது.
பெரியாருக்கு எதிரான விமர்சனங்கள் தற்போது கடுமையாக எழுந்துள்ள சூழலில், பெரியாரின் தேவை இன்று எவ்வளவு இன்றியமையாத ஒன்றாக உள்ளது என்பதை என்னோடு பகிர்ந்து கொண்டார். ” என்றும் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார்.