தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படுவதாக புகார்கள் எழுந்தது அதற்கு எதிராக போராட்டமும் நடந்தது அந்தப் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதற்குப் பிறகு ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதனையடுத்து ஸ்டெர்லை நிர்வாகமானது தங்களது ஆலையை மீண்டும திறக்கவேண்டும் என உச்ச நிதி மன்றத்தில் தொடங்கிய வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.
ஸ்டெர்லைட் நிர்வாகம் அவ்வப்போது இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்வது வழக்கமான ஒன்று. அந்த வழக்குகளும் அவ்வப்போது விசாரணைக்கு வருவதும் உண்டு. ஆனால் இதில் பெரிய அளவிலான உத்தரவு எதுவும் தற்போது வரை வராமல் இருக்கிறது.
அந்த வகையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை பராமரிப்பு காரணங்களுக்காக மீண்டும் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசின் உயர்மட்ட குழு அனுமதி வழங்கியுள்ள கழிவுகளை நீக்க மட்டுமே ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
அரசு அனுமதிக்காத எந்த பணிகளையும் அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், இந்த வழக்கை உச்சநீதிமன்றம் 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…
டெல்லி: ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…