தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இறுதி விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆலை மூடலுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று தொடங்கியது. அதன்போது கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்கலாம் என்ற யோசனையை உச்சநீதிமன்றம் முன் வைத்தது.
மேலும், தற்போது உள்ள இடத்தில் அமைந்துள்ள காப்பர் தொழிற்சாலை அமைந்திருப்பது சரியா என்றும், இது தொடர்பில் சுற்றுசூழல் மீறப்பட்டிருந்தால் அதற்கான எவ்வளவு அபராதம் தொகை விதிக்க வேண்டும் என்ற விவரங்களை நிபுணர் குழு ஒரு மாதத்திற்குள் உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிர்ப்பு.. வழக்கை தள்ளிவைத்த உயர்நீதிமன்றம்..!
இந்நிலையில், இன்று பிற்பகல் இவ்வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கிய போது உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய யோசனையை வேதாந்தா நிறுவனம் ஏற்று கொண்டது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, நிபுணர் குழு அமைக்கலாம் என்ற யோசனை குறித்து ஆலோசிக்க அவகாசம் தேவை என தெரிவித்தது. இதையடுத்து இறுதி விசாரணையை 20ம் தேதிக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…