தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை…!

Published by
Venu

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை  மூடிட வலியுறுத்தி கடந்த மே 22-ம் தேதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி  முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.அப்போது போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் காவல்துறை  தடியடியும் துப்பாக்கிச்சூடும் நடத்தியது. இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்தத் துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகத் தூத்துக்குடியில் உள்ள  சிப்காட் காவல்நிலையம், தென்பாகம், வடபாகம், மத்திய பாகம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 காவல் நிலையங்களில் மொத்தம் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
Image result for sterlite protest

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம், இது தொடர்பான 243 வழக்குகளில் 173 வழக்குகளை சிப்காட் போலீஸார் பதிவு செய்துள்ளதை ஒரே வழக்காக விசாரணை செய்ய வேண்டும். மீதமுள்ள வழக்குகளைத் தனித்தனியாக விசாரணை செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து இது தொடர்பான 5 முக்கிய வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் இந்த 173 வழக்குகள் தொடர்பான ஆவணங்களைப் பெற்று விசாரணையைத் தொடங்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றிட  கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது 12 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

வன்முறை  தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்தது.
கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.தற்போது விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர் .உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டது.மேலும்  சிபிஐ எஸ்.பி. சரவணன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிசம்பர் 15 ஆம் தேதி தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

SA vs IND : அதிரடி காட்டிய ‘ஜான்சன்’! இந்தியாவுக்கு எதிராக மாபெரும் சாதனை!

செஞ்சுரின் : இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரின் 3-வது போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த…

8 mins ago

புதுச்சேரி: வரும் 15ம் தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது! ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு!

புதுச்சேரி : வரும் நவம்பர் 15-ஆம் தேதி குருநானக் ஜெயந்தி  உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. எனவே, இந்த நாளில் மாட்டு புறநோயாளிகள்…

38 mins ago

கங்குவா ரூ.2,000 வசூல் செய்யும்..பில்டப் கொடுத்த படக்குழு..வச்சு செய்யும் ப்ளூ சட்டை!

சென்னை : சூர்யா நடிப்பில் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று…

1 hour ago

அமெரிக்க உளவுத்துறையில் இந்திய வம்சாவளியா? யார் இந்த ‘துளசி கபார்டு’?

வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள டோன்லட் டிரம்ப் வரும் 2025-ம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி…

2 hours ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (15/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…

2 hours ago

“பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை”..மருத்துவர்களுடன் போராடிய பிரேமலதா விஜயகாந்த்!

சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியிலிருந்த மருத்துவரை விக்னேஷ் எனும் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…

3 hours ago