கடந்த 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், பின் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இதன்பின் இந்த ஆணையம், தனது விசாரணை அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. இதில் சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பரிந்துரையும் செய்யப்பட்டது.
இந்தநிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கொலை வழக்கு பதியக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பலியான ஸ்னோலின் என்பவரின் தாயார் வனிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில்” ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சட்டமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஐந்து ஆண்டுகள் காத்திருத்தோம். நீதிபதி அருணா ஜெகநாதன் ஆணையம் பரிந்துரைத்தும் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
கொடநாடு வழக்கு- எடப்பாடி பழனிச்சாமி ஆஜராக உத்தரவு..!
எனவே தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவல்துறை ,வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு பதிய வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 21-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…