தூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்கு -நடிகர் ரஜினி நாளை மறுநாள் நேரில் ஆஜராக சம்மன்

Published by
Venu
  • தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் நேரில் ஆஜராகி விளக்கம் தர அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது  போலீசார் நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.ஆலை செயல்படுவதற்கு எதிராக மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது. ஆனால் அந்த சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி வந்தார். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்தித்தார். காயமடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த். இதன் பின் செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் கூறுகையில், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர் என்று கூறினார்.

இதற்குஇடையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.எனவே நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக சம்மன் அனுப்பியது.இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் நேரில் ஆஜராகி விளக்கம் தர அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நாளை மறுநாள் நேரில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினிகாந்த் மனுதாக்கல் செய்துள்ளார்.மேலும் அவரது மனுவில், நடிகர் என்பதால் தூத்துக்குடி ஆணைய அலுவலகத்தில் ஆஜராகும் போது ரசிகர்கள் அதிக அளவில் கூடிவிடுவார்கள். இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறியுள்ளார். கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Recent Posts

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…

10 hours ago

பாமக மாநாடு : உழவர்களின் முக்கிய 10 பிரச்சனைகள்… பட்டியலிட்ட ராமதாஸ்!

திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…

10 hours ago

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

12 hours ago

அல்லு அர்ஜுன் மீது சரமாரி குற்றச்சாட்டு.! “இனி சிறப்பு காட்சி இல்லை” – முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!

தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…

12 hours ago

பழைய கார் முதல் பாப்கார்ன் வரை! முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் இதோ…

ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…

12 hours ago

ரஷ்யா உயர் கோபுரங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…

ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…

13 hours ago