தூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்கு – சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கில் சிபிஐ இதுவரை நடத்தியுள்ள விசாரணையின் அறிக்கையை செப்டம்பர் 15 க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை கேட்டுள்ளது.
கடந்த ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடிய போது ஏற்பட்ட வன்முறையில் காவல்துறையினர் 13 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். மேலும் பலர் காயமடைந்தனர். காவல்துறையின் தாக்குதலைக் கண்டித்து தொடரப்பட்ட வழக்கை சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வந்தனர். சிபிஐ விசாரணை அறிக்கையை ஜூன் 30 ம் தேதி தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு இருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் வழக்கு குறித்து இன்னும் நிறைய பேரிடம் விசாரிக்க வேண்டி இருப்பதால் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டனர். அப்போது குறுக்கிட்ட எதிர் தரப்பு வழக்கறிஞர் ஏற்கனவே நீதிமாற்றம் குடுத்த அவகாசம் முடிந்த நிலையில் மீண்டும் அவகாசம் தேவையில்லை என்று வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு அறிக்கையை தாக்கல் செய்ய செப்டம்பர் 15 ம் தேதியே கடைசி நாள் என்று உத்தரவிட்டனர்.