தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்கவேண்டும் : மத்திய உள்துறை அமைச்சகம்..!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையானது. இதில் கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய நோட்டீஸில், ஸ்டெர்லைட் தொழிற்சாலைகளுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறும் தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.