தூத்துக்குடி துப்பாக்கிசூடு: நடவடிக்கை எடுக்காதது ஏன்? – தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

Thoothukudifiringcase

தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில்,  பின்ன சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இரண்டு முறை தகுதி நீக்கம்! லட்சத்தீவு எம்பி முகமது பைசலுக்கு மீண்டும் எம்பி பதவி!

அதேசமயம், த்தரவின் பேரில், இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணைய,  விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் இந்த ஆணையம், தனது விசாரணை அறிக்கையை முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இதில் சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பரிந்துரையும் செய்யப்பட்டது.

இந்த சூழலில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப பரிந்துரைத்த நிலையில், அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சமூக ஆர்வலர் ஹென்றி திபென் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணை நவம்பர் 17க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
UP CM Yogi adityanath
empuraan controversy - kerla hc
Rohit sharma - MS Dhoni
japan megaquake
BJP State president K Annamalai
Heavy rains