தூத்துக்குடியில் மருத்துவர் உட்பட இரண்டுபேர் டிஸ்சார்ஜ்.!
தமிழகத்தில் நேற்று வரை கொரோனாவால் 1204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 37 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக விஜயபாஸ்கர் கூறினார்.இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடியில் 26 பேர்கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் ஒரு மூதாட்டி ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார். இதையெடுத்து 25 சிகிக்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர் உட்பட இரண்டு பேர் சிகிச்சை முடிந்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.