தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆக-5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!
தூத்துக்குடியில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தங்க தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 441-வது தங்கத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை ஆலய கொடியை ஏற்றிய நிலையில், கொடியேற்றத்தின் போது சமாதான புறாக்கள் பறக்க விடபட்டது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி தங்க தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார். அத்தியாவசிய பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவித்துள்ளார்.