thoothukudi school holiday [File Image]
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 22) -ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் பெய்து வரும் கடும் மழை,வெள்ளத்தால் ஒட்டுமொத்த மக்களும் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து பரிதவிக்கிறார்கள்.
அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீ மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இன்னும் மீட்பு பணிகள் நடந்துவருவதாலும் சாலையில் தேங்கி இருக்கும் நீர் இன்னும் வடியாத காரணத்தாலும் நாளை (டிசம்பர் 22) -ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சாலை மற்றும் வீடுகளில் தேங்கி இருக்கும் நீர் வடிவதற்கு இன்னும் 3 நாட்கள் ஆகும் என்பதால் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே கனமழையால் பெய்த வெள்ளம் காரணமாக திங்கள், செவ்வாய், புதன் வியாழன் என 4-நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 5-வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…