வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தற்போது வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு புயல் கரையினை கடக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் வங்ககடலில் புயல் உருவாகியுள்ள காரணத்தால் தமிழக கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழையானது தென் தமிழகம் பகுதியில் அங்கங்கே பெய்து வருகிறது.
மேலும் கடலோர பகுதிகளில் கடல் உள்வாங்கும் நிகழ்வும் நடந்து வருகிறது. தூத்துக்குடியில் பீச் ரோடு கடற்கரை பகுதியில் 30 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளது. இதனால், கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் கரைதட்டி நிற்கின்றன.
அதே போல கன்னியாகுமரி கடலும் 10 அடிக்கு உள்வாங்கியுள்ளது. இதனால் கடலில் உள்பகுதியில் உள்ள பாசி படர்ந்த பாறைகள் வெளியில் தெரிகின்றன. மேலும் எப்போதும் அலைகள் சீறிப்பாயும் கடல் தற்போது அமைதியாக இருக்கிறது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…