மின் விளக்குகளை அணைத்தாலும் மற்ற மின் சாதனங்களை இயக்கலாம்-அமைச்சர் தங்கமணி
மின் விளக்குகளை அணைத்தாலும் மற்ற மின் சாதனங்களை இயக்கலாம் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்க்கு எதிராக நாம் ஒற்றுமையாக இருப்பதை இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து தீபம், மெழுவர்த்தி ஏற்றி ஒளிர விட வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
எனவே தமிழக மின்சார வாரியம் ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் மின்சாரம் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்பதால் சில நடவடிக்கைகளை எடுத்தது.அதாவது,இன்று இரவு அனைத்து செயற்பொறியாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என்றும் சரியாக 9 மணிக்கு மின்சாரம் சரியான அளவில் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தது.தமிழகத்தில் இன்று இரவு 9.00 மணி முதல் 9.09 மணி வரை வீட்டின் மின் விளக்குகளை மட்டும் அணைக்க வேண்டும் என்றும் இதர மின்சாதனங்களை அணைக்க வேண்டாம் என்றும் மின்சாரவாரியம் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை மக்கள் அணைத்தாலும் மற்ற மின் சாதனங்களை இயக்கலாம் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.மேலும் மின் சாதனங்களுக்கு பழுது ஏற்படுமோ என மக்கள் அச்சப்பட தேவையில்லை.மருத்துவமனைகளில் மின் விளக்குகள் அணைக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.