“கட்சி போதும் ஆட்சி வேண்டாம்” காலியாகும் அமைச்சர் பதவி அதிமுகவில் தீடிர் திருப்பம்..!!

Published by
Dinasuvadu desk
குட்கா விவகாரத்தில் சிபிஐ சோதனைகளுக்கு பிறகு விஜயபாஸ்கர் தார்மீக அடிப்படையில் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் அதிமுகவின் அமைப்பு செயலாளராக அவர்  நியமனம் செய்யப்பட்டுள்ளது அவரின் அமைச்சர் பதவி பறிப்பின் பிள்ளையார் சுழி என்று அனைவரும் கருதுகிறார்கள்.
இந்நிலையில் தான் அமைச்சர் விஜயபாஸ்கர் கட்சியில் பதவி என்று அதிமுக தலைமை கருதுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதை உறுதிபடுத்தும் விதமாக புதுக்கோட்டை பொதுக்கூட்டத்தில் அ.ம.மு.கவின் இணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
புதுக்கோட்டை திருவப்பூர் அருகே உள்ள நத்தம்பண்ணையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுக்கூட்டம், அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று இரவு நடைபெற்றது.
இந்தப்பொதுக்கூட்டத்தில், துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, சி.ஆர்.சரஸ்வதி மற்றும் மூத்த கட்சி நிர்வாகிகளுக்கள் என ஆதரவு MLAக்கள் பலர் பங்கேற்றனர்.
அப்போது கூட்டத்தில் பேசிய டி.டி.வி.தினகரன்,
“தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி விரைவில் முடிவுக்கு வந்துவிடும். நமது  18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் விரைவில் வழங்கப்பட உள்ள தீர்ப்பு நமக்குச் சாதகமாக அமையும் என்கிற வகையில் இந்தக் கூட்டம் அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வறட்சியில் தவிக்கிறது.நிச்சயம் ஆட்சி மாற்றம் நடக்கும் அப்போது  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நலனுக்கான ஏராளமான திட்டத்தை நிறைவேற்றுவோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் புதுக்கோட்டையில் ஒரு டாக்டர் இருக்கிறார். நல்ல டாக்டர் என்றால் அவர்களை நாம் குட் டாக்டர் என்போம், ஆனால் அந்த டாக்டர் குட்கா டாக்டராக இருக்கிறார்.  அமைச்சராக இருக்கும் டாக்டர் ஒருவர் தொடர்ந்து ஊழல் செய்து வருகிறார். அவர் வீட்டில் சோதனை செய்யாத துறைகளே இல்லை. ஆர்.கே.நகர் தேர்தல் சமயத்தில் நான் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டபோது, அமைச்சர் விஜயபாஸ்கர் என்னை வெற்றிபெற வைக்கத்தான் வேலை செய்கிறார் என அப்போது  நினைத்தேன். ஆனால் அவர் எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து, நான் வெற்றிப்பெற்றுவிட்டால் அவர்களுக்குச் சிக்கல் வந்துவிடும் என்கிற எண்ணத்தில் தேர்தலை நிறுத்தத் தான் பணியாற்றி இருக்கிறார் என்பது  பிறகுதான் தெரிந்தது.
தொடர்ந்து பேசிய அவர் , கடந்த 2 மாதங்களுக்கு முன்பு என்னுடைய குடும்பத்தினருடன் நடைப்பயிற்சி சென்றபோது, எதிரே வந்த ஒருவர் எனக்கு வணக்கம் வைத்தார். நானும் பதிலுக்கு வணக்கம் வைத்தேன். அருகில் சென்றபோது அவர், புதுக்கோட்டையைச் சேர்ந்த அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்பது தெரிந்தது. அப்போது அவர் என்னை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைவிட்டு விட்டார் என்று கூறி வருத்தப்பட்டார். உப்பு தின்றவன் தண்ணிக்குடித்து தானே ஆகவேண்டும் என்று குட்கா அமைச்சர் விஜயபாஸ்கரை குறிப்பிட்டார் TTV தினகரன்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு 6 ஆயிரம் பணம் கொடுத்தும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. தற்போது திருப்பரங்குன்றத்திலும், திருவாரூரிலும் நடைபெறும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விடுவோம் என அ.தி.மு.க. அமைச்சர்கள் பேசி வருகின்றனர். நாங்கள் மீண்டும் குக்கர் சின்னத்தில் போட்டியிடத்தான் போகிறோம். அங்கு நாம் வெற்றி பெறுவதுடன், அ.தி.மு.க. டெபாசிட் இழக்கச் செய்வோம்.
தினகரன் கூறியதை வைத்துப் பார்க்கும் போது அமைச்சர் விஜயபாஸ்கரின் பதவி குட்கா புகாரில் பறிக்கப்படுவது உறுதியாகிவிட்டது.எனவே அமைச்சர் விஜயபாஸ்கரை ஆட்சியில் இருந்து ஓரம்கட்டிவிட்டு கட்சியில் பதவி வழங்க EPS , OPS முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
DINASUVADU

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago