கன்னியாகுமரி கடலில் கொந்தளிப்பு! மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
தமிழகத்தில் ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பல மாவட்டங்களில் பரவலாக ம ழை பெய்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், கன்னியாக்குமரி கடலில் சூறைக்காற்றுடன், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.