மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழக பட்ஜெட் பெயரளவிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழக பட்ஜெட் பெயரளவிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் தாக்கல் செய்துள்ள கடைசி பட்ஜெட் இது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பெரும்பான்மையுடன் அடுத்த பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
நாங்கள் கொடியை அறிவித்தவுடன் பயந்துபோய் அதிமுக கொடிபோல இருப்பதாகக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர். நாங்கள் பெயரில்லாமல் ஒரு அணியாக இருந்தோம். புதிய கட்சி ஆரம்பிக்கவில்லை. அஇஅதிமுக அம்மா என்ற அணியை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என பெயர் வைத்து அமைப்பாக செயல்படுகிறோம். இரட்டை இலை வழக்கு முடிவுக்கு வரும் வரை தற்காலிகமாக இதே அமைப்பில் செயல்படுவோம்.
அம்மா என்ற பெயருக்குள்ளே பெரியார், அண்ணா, திராவிடம் என அனைத்தும் அடங்கியுள்ளது. எனவே திராவிடம் என தனியாக குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலையை தோற்கடித்தது எனக்கு வருத்தம் அளித்தது. ஆனாலும் நான் போட்டியிடாவிட்டால் திமுக வென்றிருக்கும். எனவே இரட்டை இலையை மீட்பதற்காகவே இரட்டை இலையை தோற்கடித்தேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக ஓபிஎஸ், இபிஎஸ் தங்கள் பதவியை ராஜினாமா செய்தால், நானும் ராஜினாமா செய்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…