டிடிவி.தினகரன் , அண்ணா, எம்.ஜி.ஆர்., பெரியாரின் மொத்த உருவம் ஜெயலலிதா என கூறியுள்ளார்.கடந்த 15ம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தனது அமைப்பிற்கான பெயரையும், கொடியையும் அறிவித்தார். இதற்கிடையில் இன்று நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரன் அறிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனக்கு உடன்பாடு இல்லை. அண்ணாவும் , திராவிடமும் இல்லாத டிடிவி அணியில் நீடிக்க விரும்பவில்லை.நான் இனிமேல் எந்த அரசியலிலும் இல்லை. இனி தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார். அண்ணாவையும், திராவிடத்தையும் நான் அவமதித்தது போல் நாஞ்சில் சம்பத் பேசி வருகிறார். அண்ணா, எம்.ஜி.ஆர்., பெரியாரின் மொத்த உருவம் ஜெயலலிதா. தேர்தல் ஆணையத்தில் கொடுத்த கட்சி பெயரில் திராவிடம் உள்ளது. பெயர் காரணத்தால் நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தமளிக்கிறது என்று தினகரன் கூறினார்.
மேலும், தேர்தல் ஆணையத்தில் கட்சிக்காக 3 பெயர்களை கொடுத்ததாகவும், அதில் ஒரு பெயரை தேர்வு செய்ததாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு தற்காலிக ஏற்பாடு தான் என்றும் டிடிவி.தினகரன் கூறினார். மேலும் தொண்டர்கள் என்னை தலைவராக உருவாக்கி வருகின்றனர் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…