பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் TTV தினகரனின் காளை வெற்றி!
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் காளையும் கலந்து கொண்ட நிலையில், இந்த காளை தற்போது வெற்றி பெற்றுள்ளது.
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு இந்த போட்டி தொடங்கிய நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள் மற்றும் 651 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டுபோட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
இந்த ஜல்லிகட்டு போட்டியில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் காளையும் கலந்து கொண்ட நிலையில், இந்த காளை தற்போது வெற்றி பெற்றுள்ளது. இந்த மாட்டை பிடிக்க சென்ற மாடுபிடி வீரர் காயமடைந்துள்ளார்.