நவ.6,7,8 ஆகிய தேதிகளில் அமமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
அமமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் வருகின்ற நவம்பர் 6 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என டிடிவி தினகரன் அறிவிப்பு விடுத்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அமமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
“ஒவ்வொரு கணமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை வாழவைத்திடவும், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடவும் லட்சியப் பயணம் மேற்கொண்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
சென்னை இராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 6.11.2021 முதல் கீழ்காணும் அட்டவணைபடி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அம்மாவட்டங்களுக்கு உட்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், அமைப்புச்செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், மாநில சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக உடன் இணைப்புக்கான முயற்சியில் சசிகலா ஈடுபட்டுள்ள சூழலில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…