அதிமுக பிளவு.? பதவி வெறி.. சிலரின் சுயநலம்..! டி.டி.வி.தினகரன் அதிரடி கருத்து.!
இன்னோர் கட்சியில் நடக்கும் கூத்து பற்றி நாம் கருத்து சொன்னால் நன்றாக இருக்காது. சிலரின் பதவி வெறி, சுயநலத்தால் இப்படி இருக்கிறது. இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும் – என டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக கட்சி விவகாரம் தான் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக இருக்கிறது. இதில் இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பு என இரு பிரிவினரும் மாறி மாறி நீதிமன்றம் சென்று, தீர்ப்பு, மேல்முறையீடு என சென்று சென்று கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து அண்மையில், அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக எனும் கட்சியை நிர்வகித்து வரும் டி.டி.வி.தினகரன் அதிமுக பிளவு பற்றிய நிருபர்கள் கேள்விக்கு பதில் கூறுகையில், ‘ இன்னோர் கட்சியில் நடக்கும் கூத்து பற்றி நாம் கருத்து சொன்னால் நன்றாக இருக்காது.
நாங்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். தமிழக மக்கள் இந்த அரசியல் நகர்வுகளை பாத்துக்கொண்டு இருக்கிறார்கள். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி. அம்மா கட்டி காத்த கட்சி. சிலரின் பதவி வெறி, சுயநலத்தால் இப்படி இருக்கிறது. இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும் எல்லாம் சரி ஆயிடும்.’ என கூறிவிட்டு சென்றார் டி.டி.வி.தினகரன்.