டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க தமிழ்செல்வன், கதிர்காமு உள்ளிட்டவர்கள் கருணாஸை சந்தித்துள்ளனர்.
தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக செப்டம்பர் 23 ஆம் தேதி அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டார் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்.
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கருணாஸுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம் .தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.
வேலூர் மத்திய சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமின் கிடைத்ததையடுத்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார்.மேலும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அமமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், மண்டல பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன்(சட்டமன்ற உறுப்பினர்), கழக அம்மா பேரவை செயலாளர், மண்டல பொறுப்பாளர் மாரியப்பன் கென்னடி(சட்டமன்ற உறுப்பினர்),கதிர்காமு(சட்டமன்ற உறுப்பினர்) உள்ளிட்டவர்கள் சந்தித்துள்ளனர்.ஏற்கனவே கருணாஸ் பேசியதற்கு தினகரன் தான் காரணம் என்று கேள்வி எழுந்து வந்தது.இந்நிலையில் இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மரியாதை நிமிர்த்தமானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…