நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும்.! – டிடிவி தினகரன் பேட்டி.!
தமிழகம் சென்று கொண்டிருக்கும் நிலைமையை பார்த்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் நடைபெறும்- டிடிவி தினகரன்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர், முன்னாள் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன், இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கபட்டது.
அதில், சசிகலா, மற்றும் ஓ. பன்னீர்செல்வம் பற்றியும், அவருக்கு ஒரு சமூகத்தினர் ஆதரவு தெரிவிப்பது குறித்தும் கேட்கப்பட்ட போது அதனை அவர்களிடம் கேளுங்கள் என கருத்து கூற மறுத்துவிட்டார்.
மேலும், கூறுகையில், தமிழகம் சென்று கொண்டிருக்கும் நிலைமையை பார்த்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன். நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது என தெரிவித்தார்.