தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 4 ஆம் தேதியான நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப் படவுள்ளது.இதனை முன்னிட்டு நேற்று சசிகலா,அதிமுக பொதுசெயலாளர் என்ற பெயரில் தீபாவளி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில்,மனம் இனிக்கும் மகிழ்ச்சித் திருநாளான தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“மனம் இனிக்கும் மகிழ்ச்சித் திருநாளான தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆணவமும், அகங்காரமும் அழிந்து, மகிழ்ச்சியும் நிம்மதியும் மக்களிடம் தழைத்திட வேண்டும் என்பதுதான் தீப ஒளி திருநாளின் அடிப்படை தத்துவமாகும். ‘அதர்மம் என்றைக்கும் நிலைத்ததில்லை’ என்பதை உலகுக்கு உணர்த்தும் இந்த நன்னாளில், தீமைகள் அனைத்தும் விலகி, தர்மம் செழிக்க வேண்டும். ஒவ்வொருவரின் வீடுகளிலும் ஆரோக்கியமும், அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்திட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தீபாவளியில் பரவுகிற புதிய வெளிச்சம் புதிய வெற்றிகளுக்கான பாதைகளை உருவாக்கட்டும். கொரோனா பெருந்துயரில் இருந்து முழுமையாக மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை விரைவில் நனவாகட்டும். வலி தந்த இழப்புகள் மாறி, வலிமையையும் வளங்களையும் இத்திருநாள் கொண்டு வரட்டும். அகத்திலும், புறத்திலும் இருள் அகன்று அனைவரும் ஆனந்தமாக வாழ்ந்திட தீபாவளி நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…