பாஜக கூட்டணியில் இணைந்தது அமமுக… டிடிவி தினகரன் அறிவிப்பு!

TTV Dhinakaran

TTV Dhinakaran : மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது.

Read More – ஆபாச படங்கள் பார்ப்பது குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

இதனால் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைத்து போட்டியிடும். கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் கடந்த சில மாதங்களாக பேசி கொண்டிருந்தோம். தற்போது கூட்டணி உறுதியாகியுள்ளது. பாஜகவின் வெற்றிக்கு அணில் போல உதவியாக இருப்போம்.

Read More – பள்ளிக்கல்வி துறையின் பேஸ்புக் பக்கம் ஹேக்.! சினிமா காட்சிகளை பதிவேற்றிய விஷமிகள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவிற்கு எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி என்பது பிரச்சனை கிடையாது. எங்களது தேவை என்ன என்பது பாஜகவுக்கு தெரியும். வரும் மக்களவை தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.

தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பாஜக எங்களை நிர்பந்திக்கவில்லை. தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்காக பாஜக தான் தேவை. நரேந்திர மோடி தான் மூன்றாவது முறை பிரதமராக போகிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என தெரிவித்தார்.

Read More – பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு! தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

எனவே எந்த உறுத்தலும் இல்லாமல் வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைகிறது அமமுக என தெரிவித்தார். ஏற்கனவே நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ கட்சி இணைந்த நிலையில், தற்போது அமகவும் இணைந்துள்ளது. இதனிடையே, ஓபிஎஸ் ஆதரவும் பாஜகவுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்