கேட்டது கிடைத்தது… தேனியில் போட்டியா? டிடிவி தினகரன் அடுத்த அப்டேட்!

ttv dhinakaran

TTV Dhinakaran: பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.  நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் வாக்குறுதி என தேர்தலுக்கு முந்தைய பணிகளை முடித்த திமுக பிரச்சாரத்துக்கு தயாராகி வருகிறது.

Read More – திமுக வேட்பாளர் வெளியீடு! எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி? 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

திமுகவை தொடர்ந்து, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்திய நிலையில், அமமுகவுக்கு மக்களவை தேர்தலில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

Read More – திமுகவை முந்திய அதிமுக.. எந்தெந்த தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?

இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், நாங்கள் கேட்ட 2 தொகுதிகளை கொடுத்துள்ளார்கள். முதலில் பாஜக எங்களுக்கு அதிக தொகுதிகளை கொடுத்தார்கள். பின்னர் கூட்டணிக்கு அதிக கட்சிகள் வந்ததால் குறைத்து தந்துள்ளார்கள்.  ஒரு தொகுதி போதும் என்றுதான் கூறினேன். குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிடுங்கள் என்று பாஜக கூறியது. இருந்தாலும் நாங்கள் கேட்டது எங்களுக்கு கிடைத்தது.

பொதும் என்ற மனநிலை இருந்ததால் 2 தொகுதிகளை பெற்றுக்கொண்டோம். எந்த தொகுதிகள் என்பதை பின்னர் பாஜக அறிவிக்கும். அதன்படி, எந்தெந்த தொகுதிகள் என்று பாஜக அறிவித்ததை அடுத்து அமமுகவுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்காள். இரு தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.

Read More – இனி மெட்ரோ தான் சென்னையின் அடையாளம்… ரெடியானது ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ பிளான்.!

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற அமமு க‘அணில்’ போல் செயல்படும். திமுக அரசின் பொய் பிரச்சாரங்களை வீடு வீடாக சென்று முறியடிப்போம் என கூறிய அவர், நான் தேனியில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியினரின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது என தேனியில் போட்டியா என்ற கேள்விக்கு பதிலளித்தார். மேலும், நான் பிறந்த மண்ணான தஞ்சையில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளேன் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்