வீராங்கனை பிரியா விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.! டிடிவி தினகரன் கருத்து.!
கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. அவரது குடும்பத்திற்கு அரசு வழங்கிய இழப்பீடு, அரசு வேலை, வீடு ஆகியவை நிச்சய வரவேற்கத்தக்கது. – டி.டி.வி.தினகரன்.
அண்மையில், சென்னை அரசு மருத்துவமனையில் வீராங்கனை பிரியா , தவறான சிகிச்சையினால் உயிரிழந்ததை தொடர்நது, தமிழக அரசு ப்ரியாவின் குடும்பத்திற்கு பல்வேறு நிவாரண உதவிகளை செய்தது. 10 லட்சம் நிவாரண உதவி, பிரியா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவர்கள் வாசிக்க சொந்த வீடு ஆகியவற்றை வழங்கி உத்தரவிட்டது.
மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது காவல்துறையினர் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் கூறுகையில், கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. அவரது குடும்பத்திற்கு அரசு வழங்கிய இழப்பீடு, அரசு வேலை, வீடு ஆகியவை நிச்சய வரவேற்கத்தக்கது. என தெரிவித்தார்.
மேலும், இவ்வாறு நான் கூறுவதால் , ஒருவேளை திமுகவுடன் கூட்டணிக்கு செல்வேன் என நினைத்துவிடாதீர்கள் எனவும் தனது விளக்கத்தை அளித்தார் டிடிவி.தினகரன்.