ஈரோட்டில் அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை!

Published by
பாலா கலியமூர்த்தி

ஈரோடு கிழக்கு தொகுதி, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அமமுக நிர்வாகிகளுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை.

டி.டி.வி. தினகரன் ஆலோசனை:

ttverode

ஈரோடு சாணார் பாளையத்தில் அமமுக நிர்வாகிகளுடன் அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அமமுக நிர்வாகிகளுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த மாதம் 31ம் தேதி முதல் கடந்த 7ம் தேதி வரை வேட்பாளர்களிடம் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

தேர்தல் களத்தில் 77 வேட்பாளர்கள்:

இதில், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக தென்னரசு, தேமுதிக வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா, இதர கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 121 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அமமுக வேட்பாளர், சுயேட்சைகள் 5 பேர் உட்பட 6 பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றதால் 77 பேர் களத்தில் உள்ளனர்.

இடைத் தேர்தலில் இருந்து அமமுக விலகல்:

இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளராக சிவபிரசாந்த் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின், குக்கர் சின்னம் கிடைக்காததால் இடைத் தேர்தலில் இருந்து அமமுக விலகுவதாக டிடிவி தினகரன் அறிவித்து இருந்தார். குக்கர் சின்னம் கிடைக்காததால் இடைத் தேர்தலில் இருந்து அமமுக விலகியதை அடுத்து, யாருக்கும்  ஆதரவு இல்லை என டிடிவி தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னம்:

மேலும், இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி நாங்கள் கருத்து கூறவில்லை என்றும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஈரோடு சாணார் பாளையத்தில் அமமுக நிர்வாகிகளுடன் அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

22 minutes ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

19 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

20 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

21 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

21 hours ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

22 hours ago