ஈரோட்டில் அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை!
ஈரோடு கிழக்கு தொகுதி, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அமமுக நிர்வாகிகளுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை.
டி.டி.வி. தினகரன் ஆலோசனை:
ஈரோடு சாணார் பாளையத்தில் அமமுக நிர்வாகிகளுடன் அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அமமுக நிர்வாகிகளுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த மாதம் 31ம் தேதி முதல் கடந்த 7ம் தேதி வரை வேட்பாளர்களிடம் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
தேர்தல் களத்தில் 77 வேட்பாளர்கள்:
இதில், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக தென்னரசு, தேமுதிக வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா, இதர கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 121 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அமமுக வேட்பாளர், சுயேட்சைகள் 5 பேர் உட்பட 6 பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றதால் 77 பேர் களத்தில் உள்ளனர்.
இடைத் தேர்தலில் இருந்து அமமுக விலகல்:
இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளராக சிவபிரசாந்த் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின், குக்கர் சின்னம் கிடைக்காததால் இடைத் தேர்தலில் இருந்து அமமுக விலகுவதாக டிடிவி தினகரன் அறிவித்து இருந்தார். குக்கர் சின்னம் கிடைக்காததால் இடைத் தேர்தலில் இருந்து அமமுக விலகியதை அடுத்து, யாருக்கும் ஆதரவு இல்லை என டிடிவி தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னம்:
மேலும், இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி நாங்கள் கருத்து கூறவில்லை என்றும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஈரோடு சாணார் பாளையத்தில் அமமுக நிர்வாகிகளுடன் அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.