மும்முறைத் தாண்டுதலில் முதன்முறையாக இந்தியாவுக்கு பதக்கம் வென்று சாதனை புரிந்திருக்கும் செல்வ பிரபுவுக்கு வாழ்த்துக்கள்.
U20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் செல்வ பிரபு, மும்முறைத் தாண்டுதலில் (triple jumper) வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். U20 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய டிரிபிள் ஜம்பர் என்ற வரலாற்று சாதனையும் படைத்தார். செல்வ பிரபு மும்முறைத் தாண்டுத போட்டியில் 16.15 மீட்டர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இது அவரது தனிப்பட்ட சாதனையாகவும் உள்ளது. இந்தியாவுக்கு முதல்முறையாக மும்முறைத் தாண்டுதல் போட்டியில் பதக்கம் வென்ற செல்வ பிரபுவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மும்முறைத் தாண்டுதலில் (Triple Jump) வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் செல்வ பிரபு திருமாறன் அவர்களை மனமார பாராட்டுகிறேன். மும்முறைத் தாண்டுதலில் முதன்முறையாக இந்தியாவுக்கு பதக்கம் வென்று சாதனை புரிந்திருக்கும் செல்வ பிரபு தடகளத்தில் உலக அளவில் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதிவில், மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைச் சாதித்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு எனது பாராட்டுகள் என்றும் வருங்காலத்தில் தடகளப் போட்டிகளில் இந்தியாவின் அடையாளமாக நீங்கள் மின்ன வாழ்த்துகிறேன் எனவும் பதிவிட்டிருந்தார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…