காலை உணவு திட்டம்: தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சி… டிடிவி தினகரன் கண்டனம்!

TTV DINAKARAN

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஓராண்டுக்கு தனியார் வசம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியதாக தகவல் வெளியானது. கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பரவலாக வரவேற்பும் கிடைத்தது. இந்த சூழலில் சென்னை மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் மாமன்ற கூட்டமானது இன்று நடைபெற்றது. இந்த மாமன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அதில் குறிப்பாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தனியார் நிறுவனத்த்துக்கு ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.

தமிழ்நாடு அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகளை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் உணவுகள் தனியார் வசம் செல்லும் நிலையில், இதனை செயல்படுத்தவிருக்கும் தனியார் ஒப்பந்ததாரர் 12 விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சியின் முடிவு கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது பதிவில், மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சுமார் 350 பள்ளிகளில் நாள்தோறும் 65ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல, தந்திர மாடல் ஆட்சி.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

இத்தீர்மானம் தமிழக முதலமைச்சரின் ஒப்புதலோடு தான் நிறைவேற்றப்பட்டதா ? என கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவேளை முதலமைச்சரும் இத்தீர்மானத்திற்கு அனுமதி அளித்திருந்தால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் போக்குவரத்து துறை தொடங்கி அனைத்து துறைகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பதாக பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மை தானோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

எனவே, காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் தீர்மானத்தை திரும்ப பெறுவதோடு, ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கிய அட்சயப்பாத்திரமான அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான உணவு தயார் செய்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy
Prime Minister's house bombed