“பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் பிற்போக்குத்தனமான கேள்வி” – சிபிஎஸ்இ-க்கு டிடிவி தினகரன் கண்டனம்!

Published by
Edison

சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு (CBSE Board Exam) ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கேள்வி இடம் பெற்றிருப்பதற்கு சிபிஎஸ்இ நிர்வாகம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற மத்திய அரசின் கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி.-யின் பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வுக்கான வினாத்தாளில் குடும்ப ஒழுக்கம் தொடர்பாக இடம் பெற்ற கேள்வியில்,கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்தால்தான் குழந்தைகள் பெற்றோருக்கு கீழ்படிவார்கள் என்றும், மனைவியின் விடுதலை குழந்தைகளின் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்து விட்டது என்றும்,

மேலும்,இதற்கு சரியான தலைப்பிடுமாறு தரப்பட்டுள்ள நான்கு வாய்ப்புகளில், குழந்தைகளின் ஒழுங்கீனத்துக்கு யார் பொறுப்பு, வீட்டில் ஒழுக்கம் சீர்கெட என்ன காரணம், வீட்டில் குழந்தைகள், பணியாளர்களுக்கான இடம், குழந்தைகள் உளவியல் என இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான இத்தகைய கருத்துகளைக் கொண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும்,இதற்கு சி.பி.எஸ்.இ நிர்வாகம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு (CBSE Board Exam) ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

வளர் இளம் பருவத்தில்(Teenage) இருக்கும் மாணவச் செல்வங்களின் மனதில் எதற்காக இத்தகைய சிந்தனைகளை விதைக்க வேண்டும்? பெண் குழந்தைகளை இழிவுப்படுத்தும் கருத்துகள் வினாத்தாளில் இடம்பெற்றதற்காக சி.பி.எஸ்.இ வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் சி.பி.எஸ்.இ பாடப்புத்தகங்கள் மற்றும் வினாத்தாள்களில் அடிக்கடி இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெறுவதைத் தடுக்க அதன் நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை பொறுப்போடு செய்திட வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

’21 நாளில் ஆஜராக வேண்டும்’ …ஊழல் வழக்கில் கவுதம் அதானிக்கு அமெரிக்க ஆணையம் சம்மன்!

’21 நாளில் ஆஜராக வேண்டும்’ …ஊழல் வழக்கில் கவுதம் அதானிக்கு அமெரிக்க ஆணையம் சம்மன்!

வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…

2 minutes ago

உ.பி-யில் பரபரப்பு…சர்வே செய்ய சென்ற அதிகாரிகள் போலீஸ் மீது தாக்குதல்!

உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி  ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…

42 minutes ago

“அவர் தயிரியமாக முடிவெடுப்பவர்…” ஜானகி நூற்றாண்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…

54 minutes ago

பொங்கல் அன்று தேர்வு..”எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை”..சு.வெங்கடேசன் கண்டனம்!

சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று  சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…

1 hour ago

ஆஸி மண்ணில் இந்திய சிங்கத்தின் சம்பவம்! சதம் விளாசி சாதனை படைத்த ஜெய்ஷ்வால்!

பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு  நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…

2 hours ago

விசாரணைக்கு அழைத்து செல்லும் வழியில் இளைஞர் உயிரிழப்பு? காவல்நிலைய மரணமாக வழக்கு பதிவு!

புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…

2 hours ago