பழனிச்சாமிக்கு தூது விடும் டிடிவி தினகரன்!என்னை அணுகினால் பார்க்கலாம்?

Default Image

ஆர்கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ  டிடிவி தினகரன், கேசி பழனிச்சாமி இன்னும் என்னை தொடர்பு கொள்ளவில்லை, அவர் தொடர்பு கொள்ளட்டும் பின்னர் பார்க்கலாம் என்று  தெரிவித்தார்.

கடந்த 15-ஆம் தேதி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார். அந்த அமைப்பின் கொடியில் ஜெயலலிதா படம் இருப்பதற்கு எடப்பாடி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாஜகவுக்கு எதிராக அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று கேசி பழனிச்சாமி தெரிவித்ததால் அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சிக் கொடி விவகாரத்தில் எடப்பாடியின் செயல்பாடு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிதான் அனைத்து அதிகாரங்களையும் பெற்ற பதவியாகும்.அமைச்சர் தங்கமணி தனித்து செயல்படுவது குறித்து எடப்பாடி ழனிச்சாமியிடம்தான் கேட்க வேண்டும். கேசி பழனிச்சாமி இன்னும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.அவர் என்னை தொடர்பு கொள்ளட்டும் பிறகு அவரை என் கட்சியில் இணைத்து கொள்வது குறித்து பார்ப்போம் என்றார் டிடிவி தினகரன்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்