கோவையை சேர்ந்த பிரபல யூடியூப் பிரபலம் டி.டி.எப் வாசன், இணையத்தில் விலையுயர்ந்த பைக்குகளில் சாகசம் செய்வது, வெளியூர் பயணங்கள் மேற்கொள்வது, அதிவேக பைக் பயணம் உள்ளிட்ட பல்வேறு விடீயோக்களை பதிவிட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, காஞ்சிபுரம் மாவட்டம் பாலுச்செட்டிசத்திரம் அருகே, தாமல் ஊர் பகுதி நெடுஞ்சாலையில் தனது பைக்கில் சாகசம் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி அருகில் உள்ள சாலையோர பள்ளதாக்கில் விழுந்தார். இதில் டி.டி.எப் வாசனுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டு கை எலும்பு முறிந்தது. இதனையடுத்து, அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த நிலையில் தற்போது சென்னையில் அவரது நண்பர் அபிஸ் என்பவரின் வீட்டில் பதுங்கி இருந்தபோது காஞ்சிபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழக காவல்துறை பரிந்துரை செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிணையில் வெளிவர முடியாதபடி டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…